Categories
டெக்னாலஜி

உஷார் மக்களே… ஜூன் 30 கடைசி தேதி… பான் -ஆதாரை இணைப்பது எப்படி… வாங்க பார்க்கலாம்…!!!

பான் கார்டு வைத்திருப்போர், அதை வரும், 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், ‘பான் கார்டு’ வைத்திருப் போர், அதை, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து இருந்தது.இதற்கான இறுதிக்கெடு, கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இதற்கான காலவரம்பு, நடப்பாண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ‘இந்த காலவரம்பை மேலும் நீட்டிக்க முடியாது’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 30ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் பான் கார்டுகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு, ஜூலை 1ம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும்.

அத்துடன், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம், வருமான வரி சட்டத்தின் கீழ், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள, பான் கார்டு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க வழிமுறை எஸ்எம்எஸ் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைக்கலாம். அதற்கு முதலில் வழிமுறைகளைப் பார்ப்போம். ஆதார் உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக கூட நீங்கள் உங்களின் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கலாம். அதாவது, நீங்கள் UIDPAN என்று டைப் செய்து சிறுதுஇடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு பின்னர் 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் ஏதாவது ஒன்றிக்கு எஸ்எம்எஸ் செய்தல் வேண்டும். இதன் மூலம் பான் ஆதாரை எளிதாக இணைக்க முடியும்.

Categories

Tech |