Categories
லைப் ஸ்டைல்

உஷார்! மஞ்சள் அதிகமாக சேர்த்தால்…. சிறுநீரக பிரச்சினை ஏற்படுமாம்…!!

நாம் அளவுக்கு அதிகமாக மஞ்சளை பயன்படுத்தும் போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.

நாம் அன்றாடம் சமையலில் முக்கியத்துவம் பெறும் ஒரு பொருளாக மஞ்சள் இருக்கிறது. இந்த மஞ்சளிலே ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் அழகு கலைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கைமருத்துவதில் முக்கிய பொருளாக பயன்படுகிறது. இதில் குர்குமின் என்ற பொருளில் அதிகளவு நன்மைகள் இருப்பதால் இது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. குர்குமின் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாகும். மஞ்சளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன.

பாக்டீரியா மற்றும் நச்சுத்தன்மை நீக்கும் பொருளாக மட்டுமே மஞ்சளை நாம் பார்க்கிறோம். சளி, இருமல், காய்ச்சல், தொற்றுநோய் காலங்களில் மஞ்சள் கலந்த பாடல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருள். இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க செய்கிறது. இப்படி நன்மைகள் இருக்கையில் இதை அதிகமாக எடுத்து கொள்வதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

பக்கவிளைவுகள்: 

வயிற்றுக் கோளாறுகள்:

அதிகமான அளவு மஞ்சளை நாம் சேர்க்கும் போது செரிமான பிரச்சினை ஏற்படுகிறது. புற்றுநோய் தாக்கம் இருப்பவர்கள் மஞ்சளை எடுத்துக் கொள்ளும் போது செரிமான பிரச்சனை அதிகமாக இருக்கும். மஞ்சள் வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்கச் செய்வதால் வயிற்றுப் பிடிப்புக்கு வைக்கிறது.

ரத்த மெலிதல்:

மஞ்சள் ரத்த மெலிதலை உண்டாக்குகிறது. இதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் மஞ்சள் ரத்ததை மெலிதாக செய்கிறது. உடலில் இருந்து கொழுப்பு மற்றும் இரத்தத்தில் மஞ்சள்  போது இந்த நிலை ஏற்படலாம்.

சிறுநீரக கற்களை உருவாக்கும்:

மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அதிக சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் இருக்கிறது. மஞ்சளில் இருக்கும் ஆக்சலேட் சத்து கால்சியம் ஆக்சைடுடன் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகிறது.

இரும்புச்சத்து குறைபாடு:

உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுத்து இரும்புச் சத்துக் குறைபாட்டை மஞ்சள் உண்டாக்கலாம்.  தேவையான அளவுக்கு மஞ்சளை எடுத்துக் கொள்ளும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

சரும சிகிச்சை:

மஞ்சளில் இருக்கும் குர்குமின் சரும பிரச்சனைகளை தடுப்பதாக தெரியவில்லை. இது போன்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மஞ்சள் சிகிச்சையின் போது ரத்த உறைதலைத் தாமதப்படுத்துவது.

மஞ்சள் நாளொன்றுக்கு எவ்வளவு பயன்படுத்தலாம்? எவ்வ்வளவு தேவை? என சரியான பரிந்துரைகள் இல்லை. அதே போன்று அதிகபட்ச அளவும் சொல்லப்படவில்லை. எனவே பொதுவாக சில வழிகாட்டுதல்களின் படி, நாளொன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் எடுத்து கொள்ளலாம். ரசாயனம் கலக்காத மஞ்சள் அல்லது தூய்மையான மஞ்சளாக இருக்கவேண்டும். மஞ்சள் ஆரோக்கியமானது என்பதற்காக அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Categories

Tech |