மார்ச் ஒன்றாம் தேதி முதல் வழக்கம்போல் வாகனங்களுக்கான கட்டணங்கள் பரனூர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே நடைபெற்ற தகராறில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகனங்கள் எந்தவித கட்டணங்களுமின்றி இயங்கிவந்த நிலையில், மார்ச் ஒன்றாம் தேதி முதல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என சுங்கச்சாவடி அருகே ஆங்காங்கே அறிவிப்பு பலகை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.