உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் 15ம் தேதி வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட பெண்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது தற்கொலை செய்து கொள்வது என தெரியவந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு பற்றிய இந்த சூழல் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள பிரியங்கா இது பற்றி சிறப்பு கூட்டம் நடத்துவதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு நேரமில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.