55 வருடங்களுக்கு பின்பாக யூரோ 2020 கால்பந்திற்கான இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியிலுள்ள கருப்பினத்தவர்களை இணையத்தின் வாயிலாக இனவெறி தாக்குதல் நடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது.
யூரோ 2020 கால்பந்திற்கான இறுதி சுற்றுக்கு சுமார் 55 வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி சென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டி வரை சென்ற இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை தவற விட்டதால் கால்பந்து ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
இதனையடுத்து யூரோ 2020 கால்பந்திற்கான இறுதி சுற்று வரை சென்ற இங்கிலாந்து அணியிலுள்ள மூன்று கருப்பினத்தவர்களை இணையத்தின் மூலம் சுமார் 11 பேர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலுக்காக காவல்துறை அதிகாரிகள் சுமார் 11 பேரை வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் ஸ்காட் என்னும் நபர் இங்கிலாந்து அணியிலுள்ள மூன்று கறுப்பினத்தவர்களின் மீது இணையத்தின் மூலம் இனவெறி தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகையினால் நீதிமன்றம் 14 வாரங்கள் அவருக்கு சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதோடு மட்டுமின்றி இங்கிலாந்து அணியிலுள்ள 3 கருப்பினத்தவர்களுக்கும் சுமார் 100 பவுண்டுகள் இழப்பீடு தொகையாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.