உத்தரகாண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏ அவரது ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிப்பு அதிகம் ஏற்பட மாவட்டங்களுக்கு உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அந்தவகையில் இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து சிற்றாறு ஒன்றைக் கடந்து மற்ற பகுதிக்கு வெள்ள பாதிப்பை காணச் செல்ல முயன்ற அவர் வெள்ளத்தில் சிக்கி அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது தூரம் சென்ற அவரை அவருடன் சென்ற ஆதரவாளர்கள் உடனடியாக பாய்ந்து பிடித்து சிறிய காயங்களுடன் அவரை பத்திரமாக கரைக்கு ஏற்றினர். ஆதரவாளர்களின் பெரும் உதவியால் காங்கிரஸ் எம்எல்ஏ நூலிழையில் பெரிய பாதிப்பின்றி காப்பாற்றப்பட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Narrowescape #MLA #Uttarakhand #DY365
Uttarakhand's Congress MLA Harish Dhami had a narrow escape after he slipped while crossing a flooded rivulet in Dharchula area of Pithoragarh on Thursday. He was rescued by party workers and supporters accompanying him. pic.twitter.com/QNSci4s2BK— DY365 (@DY365) July 31, 2020