Categories
உலக செய்திகள்

இனி இவர்களுடைய உதவி தேவையில்லை…. பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள பிரபல நாடுகள்…. பேட்டியின் மூலம் வெளிவந்த முக்கிய தகவல்….!!

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க வேண்டும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஈராக் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈராக் நாட்டில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இனி அமெரிக்கப் படையினரின் உதவி தேவையில்லை என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்காவுடன் ஈராக் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இவ்வாறான சூழலில் இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க படையினரின் உதவி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஈராக் நாட்டின் பிரதமர் கூறியதாவது, அமெரிக்காவிடமிருந்து ராணுவ உளவுத் தகவல்களை ஈராக் ராணுவம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி பயங்கரவாதிகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக் பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து தங்களுடைய பயிற்சியை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலை ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல்-காதிமி அசோசியேட் பிரஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |