பெண்கள் மீதான வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற 50 வயது பெண் ஒருவர் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணை கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழகமோ, உத்தரப் பிரதேசமோ அல்லது எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்கவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு காரணமும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.