Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தாக்கல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பிள்ளையார்குப்பம், கோரிமேடு, வைத்திக்குப்பம், காரைக்காலை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை 202 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 91 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் நேற்று வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. 104 பேர் இன்று சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |