உத்தரப்பிரதேச மாநிலத்தில் துணைத் தலைவராக ஐஎப்எஸ் அதிகாரி ஏகே ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏகே ஷர்மாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிய பிரதேச மாநிலத்தின் பாஜக துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஏகே சர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே மோடிக்கும் ஆதித்ய நாட்டுக்கும் இடையில் மனக்கசப்பு நிலவி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சர்மாவை துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.