உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க_வின் மாநில தலைவராக இருந்து வந்த மகேந்திர நாத் பான்டே மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அம்மாநில பாஜகவின் ஓ.பி.சி. பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.