Categories
தேசிய செய்திகள்

அடித்தது ஜாக்பாட்…. உ.பியில் இரண்டு தங்க சுரங்கம்… “3,350 டன் எடை”… 2வது இடத்தில் இந்தியா.!!

உத்திரப்பிரதேசத்தில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, 2 சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் அம்மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அம்மாநிலத்தின் பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் இருக்கும் சோன்பாகதீ (Sonpahadi) என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Image result for Uttar Pradesh with 3,350 tonnes of gold

தற்போது இந்தியாவிடம் 626 டன் தங்கம் கையிருப்பாக  இருக்கின்றது. இந்த சூழலில் உ.பியில் இரண்டு சுரங்கங்களிலும் உள்ள 3,350 டன் தங்கமும் வெட்டியெடுக்கப்பட்டால், நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகமாகும் என்பதில் சந்தகமேயில்லை.

Image result for Uttar Pradesh with 3,350 tonnes of gold

தற்போது அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கமும், ஜெர்மனியிடம் 3367.9 டன் தங்கமும், சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்-இடம் 2,814 டன்னும் கையிருப்பாக இருக்கின்றது. தற்போது இந்தியா அதையும் எடுத்துவிட்டால் 3,976 டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது தெரிகிறது.

 

தங்கம் அதிக டன் உள்ள நாடுகள் : 

8) ஜப்பான் – 765.2 டன்.
7) சுவிட்சர்லாந்து – 1,040 டன்.
6) சீனா – 2,141 டன்.
5) ரஷ்யா – 2,228.2 டன்.
4) பிரான்ஸ் – 2,436 டன்.
3) இத்தாலி – 2,451.80 டன்.
2) ஜெர்மனி – 3,367.9 டன்.
1) அமெரிக்கா – 8,133.5 டன்.

Categories

Tech |