உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர்.
அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை நாயக்கரின் சிறப்பு அம்சம் குறித்து தொல்லியத்துறை சார்பாக விளக்கப்பட்டது. இன்று சூரிய கிரகணம் என்பதால் மாலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.