Categories
சினிமா தமிழ் சினிமா தற்கொலை

ஊரடங்கில் மலர்ந்த காதல்… வாழ்க்கையே முடிந்து போனது… சித்ராவின் கொடூர மரணம்…!!!

ஊரடங்கியின்போது மலர்ந்த காதலால் சித்ராவின் வாழ்க்கைக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கி தற்போது சின்னத்திரையில் பிரபலமான நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார் . இவர் மே 2 ஆம் தேதி 1992- ம் வேலூரில் பிறந்துள்ளார்.இவரது தந்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாத்தா ராணுவத்தில் போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இவர்கள் அனைவரும் கோட்டூர்புரம் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

சித்ரா உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அதன்பின் ஊடகத்துறை மீதான ஆர்வம் அதிகரித்து 2013ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சேர்ந்து அதன் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் இவர் மன்னன் மகள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி 2, டார்லிங் டார்லிங் ஆகிய நாடகங்களில் நடித்து புகழ் பெற்று வந்தார். தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். தற்போது சித்ரா ஈசிஆர் சாலையில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் தங்கி வந்துள்ளார். அந்த வீட்டின் மற்றொரு பகுதியில் ஹேம்நாத் என்பவரும் தங்கியிருந்தார்.கொரோனா ஊரடங்கால் சித்ரா படப்பிடிப்பு இன்றி வீட்டில் இருந்தபோது ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் இடையே அப்போது காதல் மலர்ந்தது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மிகவும் எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரியில் திருமணம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதற்கு முன்பாகவே அக்டோபர் 19ஆம் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் போலீசின் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சித்ராவின் வாழ்க்கையே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது .

Categories

Tech |