Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“திடீர் உயர் மின்னழுத்தம்” அதிர்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகள் விசாரணை….!!

50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உயர் மின்னழுத்தம் காரணத்தினால் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தண்டலை கிராமத்தில் இருக்கும் வடக்கு தெருவில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் தங்களின் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போது திடிரென ஏற்பட்ட உயர் மின்னழுத்தால் பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பழுது அடைந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்னழுத்தம் ஏற்பட்டது தொடர்பாக வருவாய் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |