ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து மினி லாரியின் மூலம் ரேஷன் கடையில் வழங்குவதற்கான 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வேலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டது. அந்த லாரியை வேலூரை சேர்ந்த இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பென்னாலூர் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருக்கும்போது இன்பராஜ் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியை சாலையின் ஓரத்தில் உள்ள தரைப்பாலத்தின் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த இன்பராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் லாரியில் ஏற்றி வந்த ரேஷன் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.