மாமல்லபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்தனர்.
தமிழகத்தில் முழுவதிலும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து மத்திய சுற்றுலா, புராதன சின்னங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் 2 மாதங்களாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதனால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் கடந்த சில தினத்திற்கு முன்பு திறந்து மக்கள் கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)சுற்றுலா பயணிகள் அதிகளவு வாகனங்களில் வந்ததால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே 2 மாதங்களுக்குப் பிறகு கடற்கரையில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் திரண்டு குளித்து மகிழ்ந்தனர். இவ்வாறு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சிலர் ஆழ்கடல் பகுதிகளில் குளித்தபோது காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இவ்வாறு கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு போன்ற புராதன சின்னங்களை பார்ப்பதற்காக மக்கள் இணையதளத்தின் மூலம் நுழைவுச்சீட்டு பதிவு செய்து நுழைவுவாயில் காண்பித்து உள்ளே சென்றனர்.