Categories
உலக செய்திகள்

பழிக்குப் பழி… “பெண்ணின் உயிரற்ற உடலுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை”… ஈரானில் நடந்த வினோத சம்பவம்…!!

ஈரானில் மாரடைப்பால் ஒரு பெண் உயிரிழந்த பின்னரும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் வசிக்கும் Zahra Ismaili என்ற பெண்  தனது கணவர் தன்னையும் தன் மகளையும் உடல் ரீதியாக கொடுமை செய்ததால் அவரை கொலை செய்துள்ளார். இதனால் கொலை செய்த குற்றத்திற்காக Zahra Ismaili குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் Zahra -க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தூக்கில் போடுவதற்காக தூக்கு மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு முன்பாக 16 குற்றவாளிகள் தூக்கில் போடுவதற்கு வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர் . மேலும் தூக்கில் போடப்பட்டு மற்றவர்கள் உயிரிழப்பதை கட்டாயம் பார்க்கவேண்டும் என்று Zahra  வற்புறுத்தப்பட்டுள்ளார்.  இதனால் Zahra மற்றவர்களை தூக்கில் போடுவதை பார்த்தவுடன் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே  உயிரிழந்துள்ளார்.

ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக கொலைக் குற்றவாளி சட்டப்படி தூக்கிலிடப்பட வேண்டும் என்றும்  அவர் நிற்கும் நாற்காலியை உயிரிழந்தவரின் உறவினர் காலால் எட்டி உதைக்க வேண்டும் என்பதும்  ஈரானின் வழக்கம். அப்படி செய்தால் தான் உயிரிழந்தவரின்  குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் Zahra ஏற்கனவே இறந்து போனதால் அவரது கணவரின்குடும்பத்தினருக்கு  நீதி கிடைக்காது என்று எண்ணி, உயிரிழந்த பின்பும் Zahra-வின் உடலுக்கு தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி நாற்காலியில் நிற்க வைத்துள்ளனர். பின்னர் அவர் நின்றிருந்த நாற்காலியை Zahra -வின் மாமியார் காலால் எட்டி உதைத்து தனது ஆதங்கத்தை தீர்த்துள்ளார். ஒரு உயிரற்ற உடலுக்கு ஈரானில் தான் முதன் முதலாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |