பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்கா வீரர்களுக்கு அதிபர் ஜோ பைடன் மௌன அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்காவில் உள்ள டென்வர் மாகாணத்தில் டோவர் விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இந்த தளத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ளார். மேலும் 13 வீரர்களின் சவப்பெட்டி அருகில் கண்மூடி இரு நிமிடங்கள் அதிபர் ஜோ பைடன் மௌன அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிறகு அமெரிக்கா படைகள் முழுமையாக வெளியேற்றப்படும் நிலையில் அங்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 190 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து 200க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீரர்களின் மரணத்தை தொடர்ந்து அமெரிக்கா நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மேலும் வீரர்களின் உயிர் தியாகத்திற்கு பயங்கரவாத அமைப்பினர் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.