கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பழங்குடியின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பின்னணி என்ன இருக்கிறது என்ற செய்தி தொகுப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது கணவர் பாஸ்கர் ஆலம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ஆம் தேதி பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மனைவி சீதாலட்சுமி பணிக்கு அனுப்பி உள்ளார்.
அலுவலகத்தில் அவர் பணி செய்து கொண்டிருந்த சமயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான அன்பழகன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் சீதாலட்சுமி புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த அன்பழகன் தனது சகோதரர்களுடன் சீதாலட்சுமி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி புகாரை வாபஸ் பெறுமாறு கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தங்கியுள்ள வீட்டில் கல்லெறிவதாகவும், வீட்டில் இருப்பவர்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவதாகவும். தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டே பாஸ்கர் சீதாலட்சுமி தம்பதி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.