Categories
தேசிய செய்திகள்

நேத்ராவதி ஆற்றில்  வி.ஜி. சித்தார்த்தின் உடல் கண்டெடுப்பு ….!!

காணாமல் போனதாக தேடப்பட்ட வி.ஜி. சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின்  அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தேடும் பணியை மேற்கொண்டனர்.

மேலும் நேற்று விஜி சித்தார்த் கடைசியாக நிறுவனத்துக்கு எழுதிய கடிதம் சிக்கியது. இதில் நான்  யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர் என்று அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து  தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தீவிரமாக தேடிப்பார்த்தனர்.  36 மணி நேரமாக தேடும் பணி நடைபெற்ற நிலையில், வி.ஜி. சித்தார்த்தின் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |