நெல்லையில் ஊரடங்கு விதியை மீறியதாக 43 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணனின் ஆணையின்படி ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றுபவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி ஒரே நாளில் ஊரடங்கு விதியை மீறியதாக 43 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.