Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

42 வாகனங்கள் பறிமுதல்…. மாவட்ட சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 42 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணனின் உத்தரவின்படி ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்களின் மீது வழக்கு பதிவு மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

அதன்படி மாவட்டம் முழுவதுமாக ஒரே நாளில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்ததால் 39 நபர்களின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் 42 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |