வாய்க்காலில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய நீர் வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினை தொடர்ந்து 5 மீட்டர் நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை கலெக்டர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு உடைந்த கரை உடனடியாக சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது, குப்பக்குடி பகுதியில் இருக்கும் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் சிறு உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த உடைப்பில் இருந்து வெளிவரக்கூடிய தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம் பிடாரி ஏரியில் கலந்து வருவதன் மூலம் 22,000 ஏக்கர் பாசனம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சிறிய உடைப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும், விரைவில் உடைப்பு சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.