வாய்க்காலில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பொன்னார் பிரதான வாய்க்கால் அமைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது டெல்டா பாசன விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். இதனால் முன்கூட்டியே இந்த பிரதான பொன்னார் வாய்க்காலை 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட பாசனத் துறை, தமிழக விளையாட்டுத் துறை செயலாளரும், கண்காணிப்பு அதிகாரியுமான ரமேஷ்சந்த் மீனா என்பவர் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூர்வாரும் பணியானது 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதும் டெல்டா பாசன விவசாயிகள் பயனடையும் வகையில் பணியானது சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.