Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பறையன்குளம் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷுக்கு ஏராளமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் கடந்த 5-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த ராஜேஷின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |