மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தண்ணீர்பந்தல் பகுதியின் அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் சக்தியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது, அதனை ஓட்டி வந்தவர் யாரென தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.