Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்…. வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்…. போலீஸ் நடவடிக்கை….!!

பரிசு கூப்பன் வழங்கிய அ.தி.மு.க பிரமுகர் தனசேகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் உள்பட 3 ஊராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. அப்போது சிறு கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க பிரமுகர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி வாக்குச்சாவடி மையத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுத்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க பிரமுகர் தனசேகர் என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |