வாக்காளர்களுக்கு இடையூறு அளித்த வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செண்பகராமநல்லூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது நடைபெறும் கூந்தன்குளத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆறுமுகத்தின் உறவினர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஆறுமுகம் வாக்காளர்களை தனது வேனில் ஏறுமாறு கூறி இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து வாக்காளர்கள் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.