வாக்கு எண்ணும் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் இரவு 10.15 மணி வரை வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.