தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல இடங்களில் கனமழை பெய்ததால் மந்தமான முறையில் வாக்குப்பதிவு காணப்பட்டுள்ளது. அதன்பின் மழை நின்றதும் மீண்டும் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
அப்போது அரசு ஆதி திராவிடர் கழகப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில் வாக்குச்சீட்டுகள் முறையாக உள்ளதா எனவும், வாக்களிப்பது, மை வைப்பது மற்றும் பெயர்கள் சரி பார்ப்பது போன்ற பணிகளை அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.