உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் வாக்குச்சாவடி மையங்களில் நடந்ததை அலுவலர் மற்றும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அமைந்திருக்கும் 187 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஓட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஒரு சில பகுதிகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசினர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் இரு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்களித்து சென்றுள்ளனர். மேலும் இந்த வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.