Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு…. ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

வாக்குச்சாவடி மையத்தில் நரிக்குறவர் இன மக்கள் உற்சாகமாக ஓட்டு போட்டு சென்றுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 388 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்ததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து சென்றுள்ளனர். அதன்பின் முதன்முறையாக வாக்களிக்கும் நபர்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்ற காரணத்தினால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதற்கு பிறகு பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து காவேரிபாக்கம் ஒன்றியத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்ததை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அரக்கோணம் ஒன்றியத்தில் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற மையத்தில் நரிக்குறவர் இன மக்கள் உற்சாகமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் உள்ளே சென்று வருவதை அறிந்த மற்ற வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேசி அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.

Categories

Tech |