Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக கடத்தல்…!!

கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலைகள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கல்நகர் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் அதிகாரிகள் ரகசியமாக கடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்  நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன.

திருச்சி பெல் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது. இந் நிலையில் நேற்று இரவு இங்கே இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வெளியே கொண்டு சென்றதாக தெரிகிறது.

இதையறிந்த கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர். அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி செய்த நிலையில் யாருக்கும் தெரியாமல் அவற்றை வெளியே கொண்டு சென்றதால் சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாக பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |