வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனத்துறையினர் விரட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலூர் பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமுத்தாய் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து இன்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த ராமுத்தாய் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து ராமுத்தாய் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது காட்டு யானைகள் அடிக்கடி வந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனால் விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று வனத்துறையினற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.