வாழைத்தார் வரத்து குறைந்து இருப்பதால் அவற்றின் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு விளையும் வாழைத்தார்களை கூலி ஆட்கள் மூலமாக வெட்டி உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், விற்பனை மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து ஏலத்தில் பூவன் வாழைத்தார் 200 ரூபாய்க்கும், பச்சைநாடன் 200 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 220 ரூபாய்க்கும், மொந்தன் 300 ரூபாய்க்கும் மற்றும் பூவன் வாழைத்தார் 230 ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது. மேலும் வாழைத்தார் வரத்து குறைவு காரணத்தால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.