மதுபோதையில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்(35). இவர் தனது நண்பர்களான சுரேஷ்(30) மற்றும் அசோகனுடன்(30) சேர்ந்து நேற்று முன்தினம் பாண்டிபஜார் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது போதை அதிகமானதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மற்றும் அசோகன் இருவரும் சேர்ந்து செந்திலை அடித்து உதைத்துள்ளனர். அவர் அடி தாங்காமல் உயிர்பிழைக்க மதுபான கடையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.
பின்னால் விரட்டி வந்த சுரேசும் அசோகனும் சாலையில் கிடந்த கான்க்ரீட் கல்லை எடுத்து செந்திலின் தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த காவல்துறயினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த செந்திலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ் மற்றும் அசோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.