Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டில் இருந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் பகுதியில் கொத்தனாரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத ரஞ்சித் குமார் தனது சகோதரியான வளர்மதி என்பவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரஞ்சித்குமார் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்ட ரஞ்சித் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடும்ப பிரச்சனை காரணமாக ரஞ்சித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |