Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெட்டுவான் குளம் கிராமத்தில் பேச்சி ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பேச்சி ராஜாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பேச்சி ராஜா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பேச்சி ராஜாவின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |