வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இவர் கல்லாமொழியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு சுந்தரலிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தினமும் இரவில் இட்லி கடையில் தூங்கி வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இன்நிலையில் சுந்தரம் வீட்டில் சாப்பிட்டு விட்டு கடைக்கு தூங்க சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் அர்ச்சனா கடையைத் திறப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததை கண்டு சந்தேகமடைந்த அர்ச்சனா ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது சுந்தரலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா இது குறித்து குலசேகரப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுந்தரலிங்கத்தின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.