குடும்பத் தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துராஜ் – கற்பகவல்லி. முத்துராஜ் கூலி தொழில் செய்து வந்தார் . இத்தம்பதியினருக்கு முகிலா என்ற பெண் குழந்தை உள்ளது. முத்துராஜிற்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துராஜிற்கும் கற்பகவல்லிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கற்பகவல்லி தனது கணவரிடம் கோபித்து கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த முத்துராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.