திருப்பூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்- சித்ரா. இத்தம்பதியருக்கு ஐந்து வயதில் குழந்தை உள்ளது. பாண்டியராஜன் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி சித்ரா பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சித்ராவுக்கும் ராக்கியபாளையத்தை சேர்ந்த அருண் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை பாண்டியராஜன் அறிந்துள்ளார் . இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். எனினும் சித்ரா அருணுடன் சேர்ந்து வாழ பாண்டியராஜனிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த பாண்டியராஜன் நேற்று இரவு திடீரென்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாண்டியராஜன் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக பேசும் காட்சியையும், கழுத்தில் தூக்கு மட்டும் காட்சியையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.