Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த மாற்றுத்திறனாளி… நள்ளிரவில் திடீரென கேட்ட சத்தம்… பரிதவிக்கும் மனைவி…!!

மாற்றுத்திறனாளி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கிருஷ்ணமூர்த்தி-பிரபாவதி . கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். கிருஷ்ணமூர்த்தி பிறந்தது முதல் கால் சிறிது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனை அவர் மனவேதனையில்  தனது மனைவியிடம் பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கிருஷ்ணமூர்த்தி தனியாக படுக்கச் சென்றார். நள்ளிரவு  1:30 மணி அளவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் அறையில் சத்தம் கேட்டுள்ளது . பிரபாவதி அங்கு  சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து பதறிய அவரது மனைவி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் கிருஷ்ணமூர்த்தியை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவ மனைக்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலைமீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய  விசாரணையில் கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி என்பதால் மிகவும் மனவருத்தம் அடைந்து இம்முடிவை அவர் எடுத்துள்ளார்  என அவரது மனைவி கூறியுள்ளார். மேலும்  வழக்குப்பதிவு செய்து வேறு ஏதும் காரணம் உள்ளதா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |