ராட்சத அலையில் சிக்கி மாயமான வாலிபரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் வாலிபரின் சடலம் கரை ஒதுங்கியதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் அரியவாயல் பகுதியில் வசித்த அப்துல் பாசித் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த அப்துல் பாசித்தை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் யாரிடமும் இது பற்றி கூறாமல் அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.