Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் துணிகர செயல்… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பெண்ணின் முகத்தில்  மிளகாய் தூளை தூவி தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜீவா என்ற பெண்  தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் இருந்தபோது அங்கு 2 வாலிபர்கள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜீவா அந்த வாலிபர்கள் குடிப்பதற்காக தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்து அதனை  ஒருவர் வாங்கி  குடித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு வாலிபர் தனது பாக்கெட்டில் கையை விட்டு மிளகாய்த்தூளை அள்ளி திடீரென ஜீவாவின் முகத்தில் தூவி உள்ளார்.  அதன்பிறகு அந்த 2 வாலிபர்களும் ஜீவாவை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறிக்கும் போது அவர் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து செல்வதற்குள் அந்த 2 வாலிபர்களும் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆனாலும் அவர்கள் அந்த வாலிபர்களை விடாமல் துரத்திச் சென்று ஒருவரை மட்டும் பிடித்த போது மற்றொருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து அவர்கள் அந்த வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராஜாஜி காலனி பகுதியில் வசிக்கும் மனோஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் மனோஜ் திருடிச் சென்ற தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற இன்னொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |