Categories
உலக செய்திகள்

வான் தாக்குதல் நடத்திய துருக்கி… ராணுவ அதிகாரிகள் பலி… கண்டனம் தெரிவித்த ஈராக்…!!!

வான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலியான சம்பவம் பற்றி துருக்கிக்கு எதிராக ஈராக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் இருக்கின்ற தன்னாட்சி பெற்ற பிராந்தியமான குர்திஸ்தானில் சைடகன் நகரில் துருக்கி ராணுவம் நேற்று முன்தினம் வான் தாக்குதலை மேற்கொண்டது. அச்சமயத்தில் துருக்கி இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று ஈராக் எல்லைப் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அதில் ஈராக் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இரண்டு பேரும் மற்றும் ராணுவ வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் துருக்கி மீது ஈராக்குக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் காரணமாக ஈராக் வருவதற்கு திட்டமிட்டிருந்த துருக்கி ராணுவ மந்திரியின் பயணத்தை ஈராக் அரசு ரத்து செய்திருக்கிறது. மேலும் வான் தாக்குதல் தொடர்பாக ஈராக்குகான தூக்கிய தூதரை நேரில் வரவழைத்து சம்மன் வழங்கி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்த சம்பவம் பற்றி ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஈராக் பிராந்தியத்துக்குள் துருக்கி இராணுவத்தின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட பயங்கர தாக்குதலை ஈராக் முழுவதுமாக நிராகரிக்கிறது. அதனை கடுமையாக கண்டிக்கிறது. அதனால் இன்று திட்டமிட்டிருந்த துருக்கி ராணுவ மந்திரியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதே சமயத்தில் துருக்கி இராணுவத்தின் வான் தாக்குதலுக்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்யக்கூடிய வகையில், அந்த நாட்டின் தூதரை நேரில் வரவழைத்து சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |