Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாங்கி தர மறுத்த தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரநல்லூர் பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்ராஜ் தனது தந்தையான வேலுசாமியிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி இப்போது வாங்கித் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேல்ராஜ் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய வேல்ராஜின் தாய் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வேல்ராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |