வானிலை அறிக்கையின் நடுவில் வெளிவந்த படத்திற்கு தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில் கடந்த 17 ஆம் தேதி அன்று உள்ளூர் நேரமான 6.30 மணிக்கு வானிலைஅறிக்கை ஒளிப்பரப்பாகியுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக 13 நொடிகள் மட்டும் ஆபாச படம் வெளியாகியுள்ளது. மேலும் அனைவரும் செய்தி பார்த்து கொண்டு இருந்ததால் அதனைக் காண வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு புகார்கள் குவிந்துள்ளன.
மேலும் இது தொடர்பாக வானிலை அறிக்கையை வாசித்த செய்தியாளரான மிச்செல்லி பாஸியிடம் கேட்ட பொழுது, ‘அவர் எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தரப்பில் இருந்து இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “இந்த சம்பவமானது குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் விசாரணையை தீவிரமாக்கியுள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சம்பவத்திற்காக அந்த தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.