Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படம்: விஜய்க்கு வில்லன் யார் தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அத்துடன் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று (டிச,.24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் விழாவில், நடிகர் பிரகாஷ் ராஜ் வாரிசு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இப்படத்தின் இறுதிக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் என கூறிய அவர், நடிகர் விஜய்யின் இன்றைய வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டு பேசினார்.

Categories

Tech |