மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாஸ்டர்’ . இந்தப் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகை நஸ்ரியா வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அவருடன் இணைந்து நேரம், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் மனைவி அலீனாவும் நடனமாடியுள்ளார் . தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .